கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ....
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் திடீர்தீப்பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தீயை அணைப்பதற்காக 50ற்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும் குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு படையினர், இராணுவம் மற்றும் துறைமுக தீயணைப்பு படையினரின்உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ....
Reviewed by Author
on
June 15, 2016
Rating:

No comments:
Post a Comment