சிறுவர் தொழிலாளர்களா? முறைப்பாடுகளுக்கு 1929ஐ அழையுங்கள்....
சிறுவர்களை தொழிலாளர்களாக பயன்படுத்துபவர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை பதிவு செய்ய அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர தொலைத் தொடர்பு இலக்கத்தினூடாக அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த திட்டமானது ஒவ்வொரு சிறுவர் தொழிலாளர்களையும் நீக்குவதற்காகவும் மற்றும் அனைத்து சிறுவர்களுக்கும் தரமான கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினமாகும், இதனால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பல திட்டங்களை இன்று முன்னெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
சிறுவர் தொழிலாளர்கள் 168 மில்லியன்
இன்று சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கான எதிர்ப்பு தினமானது அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
உலகளாவிய ரீதியில் 168 மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் 2002ஆம் ஆண்டு தொடக்கம் இந்த தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 2030 நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சிறுவர் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதை முற்றாக நிறுத்துவதற்கான யோசனையும் இன்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் தொழிலாளர்களா? முறைப்பாடுகளுக்கு 1929ஐ அழையுங்கள்....
Reviewed by Author
on
June 13, 2016
Rating:

No comments:
Post a Comment