உயர்தரம் சித்தியடைந்த 2000 பேருக்கு ஆசிரியர் பயிற்சிகள்....
உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்த 2000 பேருக்கு ஆசிரியர் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 2000 பேரையும் கல்வி அமைச்சில் இணைத்துக்கொண்டு இவர்களுக்கான பயிற்சியை வழங்குவதோடு, பிறகு இவர்களுக்கான பட்டப்படிப்புக்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று களனி விகாரமாதேவி பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது 25,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர்,
இதற்காக கணிதம், விஞ்ஞானப் பாடங்களின் தகுதியோடு இவர்களுக்கான பயிற்சி வழங்குவதற்கான நிதியினை அரசு வழங்கவுள்ளதாகவும், இதன் மூலம் நாடளாவிய ரீதியில் காணப்படும் விஞ்ஞானம் மற்றும்
கணித பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாமல் பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்களுக்கு மீண்டும் பாடசாலையில் இணையும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், உலகத்திற்கு பொருந்தக் கூடிய எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த புதிய கல்வி முறை, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை கட்டிடங்களின் தேவை உள்ளதாகவும் இதன்பொருட்டு தேவையான நிதியினை தேடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயர்தரம் சித்தியடைந்த 2000 பேருக்கு ஆசிரியர் பயிற்சிகள்....
Reviewed by Author
on
June 25, 2016
Rating:

No comments:
Post a Comment