30 மில்லியன் ரூபாவை இருப்பில் வைத்து அழகு பார்க்கும் செங்கலடி பிரதேச சபை....
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் 30 மில்லியன் ரூபாய் நிதி இருப்பில் உள்ளபோதிலும், அந்த நிதி நீண்ட நாட்களாக எவ்வித மக்கள் நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படாதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏறாவூர்ப் பற்று பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக பாரிய நிலப்பரப்பைக் கொண்டதுடன்,
மூவின மக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்குள்ள கிராமங்களில் உடனுக்குடன் சீர் செய்யக் கூடிய குறைபாடுகள் காணப்படுகின்றன.
இருப்பினும், பிரதேச சபை அந்த விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால், பிரதேச சபையின் இருப்பில் உள்ள நிதியில் 10 மில்லியன் ரூபாய் செலவில் மாவனையாறு கிராமத்துக்கான வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு கொங்கிறீட் இட்டு செப்பனிடத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஏனைய நிதியில் திண்மக்கழிவு அகற்றவும் உழவு இயந்திரங்கள், குடிநீர் விநியோகதுக்காக பவுசர்கள் கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
பிரதேசத்தில் சேதமடைந்துள்ள வீதிகளை அடையாளங் கண்டு செப்பனிடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதேச சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இலுப்படிச்சேனை – மாவடியோடை போக்குவரத்துச் சேவையை நடத்துமாறு பிரதேச மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
30 மில்லியன் ரூபாவை இருப்பில் வைத்து அழகு பார்க்கும் செங்கலடி பிரதேச சபை....
Reviewed by Author
on
June 02, 2016
Rating:

No comments:
Post a Comment