சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்...
சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இன்று மதியம் திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.
காலை முதல் திருகோணமலையின் முக்கிய பகுதிகளை பார்வையிட்ட இவர்கள் மதியம் கிழக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்விலும் பங்கேற்றனர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் பல அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன்போது கிழக்கின் முதலீடு எனும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் கிழக்கு மாகாணத்தினை முற்றிலும் அபிவிருத்தி அடைந்த மாகாணமாக மாற்றுவதற்கு எவ்வாறான திட்டங்களை கையாள வேண்டும் என்பது தொடர்பிலும் அதற்கான முதலீட்டாளர்களை நாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பிலும் அதற்கான சிங்கப்பூர் நாட்டின் உதவிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,
திருகோணமலை - அம்பாறை - பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை இணைக்கின்ற புதிய நான்கு வழி நெடுஞ்சாலை ஒன்றினை நிர்மாணிப்பது தொடர்பிலும், குறித்த மூன்று மாவட்டங்களின் மத்தியில் சர்வதேச விமான நிலையம் ஒன்றினை நிறுவுவது தொடர்பிலான திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்...
Reviewed by Author
on
June 02, 2016
Rating:

No comments:
Post a Comment