அண்மைய செய்திகள்

recent
-

ஏழைகளுக்கு சிகிச்சை தர மறுத்த மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம்: டெல்லி அரசு அதிரடி.....


ஏழைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க மறுத்த குற்றச்சாட்டில் சிக்கிய 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு ரூபாய் 600 கோடி அபராதம் விதித்துள்ளது.

மானிய விலையில் ஒதுக்கீடு செய்யப்படும் இடத்தில் கட்டப்படும் மருத்துவமனைகளில் 10 சதவீத நோயாளிகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சட்ட விதிமுறை அமலில் உள்ளது.

ஆனால் அனைத்து மருத்துவமனைகளும் இந்த விதிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை. சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளை அவர்கள் திருப்பி அனுப்பி விடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக புகாரில் சிக்கிய ஐந்து தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 கோடி அபராதம் விதித்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான நோட்டீஸை எதிர்த்து சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் தொடர்ந்த வழக்கில், அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள Max Super Specialty Hospital (Saket), Fortis Escorts Heart Institute, Shanti Mukand Hospital, Dharamshila Cancer Hospital and Pushpawati Singhania Research Institute ஆகிய 5 மருத்துவமனைகளும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளன.

மருத்துவமனைகளில் இருந்து வசூலிக்கும் இந்த அபராதத் தொகையானது சுகாதாரத்துறைக்கு பயன்படுத்தப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

ஏழைகளுக்கு சிகிச்சை தர மறுத்த மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம்: டெல்லி அரசு அதிரடி..... Reviewed by Author on June 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.