8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு- முதல்வரின் தாராள மனம்...
ஆந்திராவில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் 8 மாத குழந்தையின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் ரமணப்பா- சரஸ்வதி.
இவர்களுக்கு ஞான சாய் என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது, பிறந்ததில் இருந்தே குழந்தைக்கு நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளது.
எனவே குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்ய ரூ.50 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ள ரமணப்பாவால் குழந்தையின் மருத்துவ செலவுகளை கவனிக்க முடியவில்லை, குழந்தையின் உடல்நலமும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர், குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த விடயம் ஊடகங்களில் வெளியாகவே, குழந்தையின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தைக்கு சென்னையில் அறுவை சிகிச்சைகள் நடத்த தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு- முதல்வரின் தாராள மனம்...
Reviewed by Author
on
June 25, 2016
Rating:

No comments:
Post a Comment