பிறந்த நாள் உடையில் வந்த பிரித்தானிய மகாராணி: அவமதித்த லண்டன் மேயர்----
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் தனது பிறந்த நாள் உடையுடன் பொது நிகழ்ச்சிக்கு வந்தபோது அவரது உடை குறித்து எழுந்துள்ள இணையத்தள விமர்சனங்கள் பரபரப்பாக பரவி வருகிறது.
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் தனது 90-வது பிறந்த நாளை கடந்த ஏப்ரல் 21ம் திகதி கோலாகலமாக கொண்டாடினார்.
எனினும், மகாராணியின் பிறந்த நாள் கொண்டாங்கள் இன்றளவும் தொடர்ந்த நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் Trooping the Colour என்ற நிகழ்ச்சியில் மகாராணி நேற்று கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் 1,600 வீரர்கள் மற்றும் 300 குதிரைகளின் அணிவகுப்பை மகாராணி பார்வையிட்டார்.
லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த நிகழ்ச்சிக்கு ஈடாக மகாராணி அணிந்திருந்த உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பிறந்த நாளை கொண்டாடி வரும் மகாராணி தனக்கு பிடித்தமான பச்சை நிற உடையில் வந்திருந்தார்.
ஆனால், இந்த பச்சை நிற உடை தான் தற்போது இணையத்தளவாசிகளுக்கு மத்தியில் பல்வேறு கிண்டல்களை எழுப்பி வருகிறது.
சாதாரண பச்சை நிறத்தில் இல்லாமல், காண்பவர்களின் கண்களை கூச வைக்கும் பளீர் நிறத்தில் உடை இருந்தது பல்வேறு கிண்டல்களை எழுப்பியுள்ளது.
இது குறித்து ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தகதகவென மின்னும் இந்த உடையில் மகாராணி இரவு நேரத்தில் வெளியே வந்தால், விளக்குகள் தேவையில்லை’ என குறும்பாக பேசியுள்ளார்.
மற்றொரு நபர் வெளியிட்ட பதிவில், ‘மகாராணி அணிந்துள்ள உடையின் நிறம் விண்ணில் உள்ள சர்வதேச ஆய்வு விண்கலத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு கூட எளிதாக தெரியும்’ என கூறியுள்ளார்.
உச்சக்கட்டமாக, ‘மகாராணி உடையின் நிறத்தை சந்திரனில் இருந்துக்கூட கண்டு ரசிக்கலாம்’ எனப் பேசியுள்ளார்.
மகாராணியின் பிறந்த நாள் உடைக்கு கிளம்பிய விமர்சனங்களை மகாராணிக்கு முன்னால் லண்டன் மேயரான சாதிக் கான் நடந்துக்கொண்டது தான் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, நன்றி தெரிவித்தல் என்ற ஒரு நிகழ்ச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மகாராணி, எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கொர்பைன், லண்டன் மேயரான சாதிக் கான் உள்ளிட்ட முக்கியமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
அப்போது, மகாராணியான இரண்டாம் எலிசபெத் மேயரை பார்த்தபோது, அவர் வாயை திறந்த கொட்டாவி(Yawn) விட்டதால் மகாராணி அதிருப்தியுடன் தலையை திருப்பிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. மகாராணி பங்கேற்ற இந்த நிகழ்ச்சி கலையிழந்து காணப்பட்டதால் மேயர் உற்சாகமின்றி அமர்ந்திருந்தார் எனக்கூறப்படுகிறது.
மகாராணிக்கு முன்னால் கொட்டாவி விடும்போது வாயை கைகளால் மூடிக்கொள்ளும் நாகரீகம் கூட மேயருக்கு தெரியவில்லையா? என சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேயருக்கு நெருக்கமானவர்கள் கூறியபோது, ‘லண்டன் மேயரான சாதிக் கான் ஒரு இஸ்லாமியர். தற்போது ரமலான் நோன்பு தொடங்கியுள்ளதால், மேயர் உணவு சாப்பிடாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால், அவர் மிகவும் சோர்வாக இருந்துள்ளார்.
இதனை வைத்து மேயர் மகாராணியை அவமதித்து விட்டதாக எண்ணக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளனர்.
பிறந்த நாள் உடையில் வந்த பிரித்தானிய மகாராணி: அவமதித்த லண்டன் மேயர்----
Reviewed by Author
on
June 13, 2016
Rating:

No comments:
Post a Comment