உடல் ஊனமுற்றவர்களுக்கு நிதி திரட்ட வாலிபர் நிகழ்த்திய அபார சாதனை----
சுவிட்சர்லாந்து நாட்டில் உடல் ஊனமுற்றவர்களுக்கு நிதி திரட்ட வாலிபர் ஒருவர் 300 கி.மீ தூரத்தை 99 மணி நேரங்களில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
சுவிஸின் Solothurn மாகாணத்தில் Jeremiah Schaffner என்ற 25 வயதான வாலிபர் வசித்து வருகிறார்.
சமூக சேவை செய்வதில் ஆர்வமுடைய இவர் உடல் ஊனமுற்ற நபர்களுக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, 300 கி.மீ தூரத்தை 100 மணி நேரத்திற்கும் குறைவாக ஓடி நிதி திரட்ட வேண்டும் என தீர்மானித்து அதனை நண்பர்களின் ஆதரவுடன் தொடங்கியுள்ளார்.
பேசல் நகரில் அவர் ஓட்டத்தை தொடங்கியுள்ளார். வாலிபருக்கு துணையாக அவரது நண்பர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் பயணித்துள்ளனர்.
ஒவ்வொரு கி.மீ தூரம் கடந்தபோது அவருக்கு 26 பிராங்க் வரை நிதி சேர்ந்தது.
இரவில் நன்றாக நித்திரை கொண்டால் மட்டுமே அடுத்த நாள் ஆரோக்கியமாக ஓட முடியும் என்பதால், இரவில் 6 முதல் 8 மணி நேரம் வரை நித்திரை கொண்டுள்ளார்.
இவ்வாறு ஓட்டத்தை தொடங்கிய வாலிபர் 100 மணி நேரத்திற்கு முன்னதாகவே, அதாவது 300 கி.மீ தூரத்தை 99 மணி நேரம் மற்றும் 15 நிமிடங்களில் Locarno நகரை இன்று சென்றடைந்து தனது ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
மேலும், இந்த முயற்சியின் மூலம் அவர் பொதுமக்களிடம் 7,800 பிராங்க்(11,81,824 இலங்கை ரூபாய்) நிதியை திரட்டியுள்ளார்.
வாலிபரின் முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, வாலிபருக்கு அவரது பெற்றோர் உள்பட பொதுமக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு நிதி திரட்ட வாலிபர் நிகழ்த்திய அபார சாதனை----
Reviewed by Author
on
June 13, 2016
Rating:

No comments:
Post a Comment