அண்மைய செய்திகள்

recent
-

ஹிலாரி கிளிண்டன், டிரம்ப்பை விட அதிக வாக்குகள் பெறுவார்: கருத்துக் கணிப்பில் தகவல்...


எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்ப்பை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் பெறுவார் என்று கருத்துக் கணிப்பு ஒன்று கூறியுள்ளது.

வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிபர் தேர்தல் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஆளும் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் கிட்டத்தட்ட இறுதியாகி விட்டனர்.

இந்நிலையில், கருத்துக் கணிப்பு ஒன்றில் டிரம்பை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் ஹிலாரி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த கருத்துக் கணிப்பில் 68-வயதான ஹிலாரிக்கு ஆதரவாக 47 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

அதேபோல், 69 வயதான டிரம்ப்புக்கு 45 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு 9 சதவிதம் வாக்குகள் அதிகம் கிடைத்திருந்தது.

ஹிலாரி கிளிண்டன், டிரம்ப்பை விட அதிக வாக்குகள் பெறுவார்: கருத்துக் கணிப்பில் தகவல்... Reviewed by Author on June 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.