உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடாத்தத் தயார்!– மஹிந்த...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடாத்தத் தயார் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு குறித்து நாவலப்பிட்டியில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடாத்த எமது ஆணைக்குழு தயார் நிலையில் உள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த நாம் தயார்.
எனினும் ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களுக்குமான உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயம் செய்து வர்த்தமானியில் அறிவிக்கப்படும் வரையில் தேர்தல் நடாத்துவதில் சிக்கல் காணப்படுகின்றது.
மேலும் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் தீர்ப்பினையோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையையோ உத்தியோகபூர்வமாக அறிவித்தால் தேர்தலை நடாத்தத் தயார் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடாத்தத் தயார்!– மஹிந்த...
 
        Reviewed by Author
        on 
        
June 03, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
June 03, 2016
 
        Rating: 


No comments:
Post a Comment