அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்! பிரட் அடம்ஸ் கோரிக்கை


பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக இலங்கை உறுதியளித்திருந்த போதிலும் அதனை நீக்குவதற்கான உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்வில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

எனினும், இச்சட்டத்தின் ஊடக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கும் வரையிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும் என இலங்கை அரசாங்கத்தால் நம்பவைக்க முடியாது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்றாக காணப்படுகின்ற போதிலும் மிகவும் மந்த கதியிலேயே அந்நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, அண்மையில் சாவகச்சேரி பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்! பிரட் அடம்ஸ் கோரிக்கை Reviewed by Author on June 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.