இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் கடற்படையினர் வலுவடைகின்றனர்....
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமது நிலைகளை பலப்படுத்தும் பணிகளில்இலங்கையின் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
வடக்கின் கிழக்குக்கரை மற்றும் கிழக்கு மாகாணத்தில் இந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன.
வன்னியில் இலங்கையின் கடற்படை 'முகாமான எஸ்எல்என்எஸ் கோட்டாபய' ஏற்கனவே 300ஏக்கர் தனியார் காணியையும் 200 ஏக்கர் அரச காணியையும் சுவீகரித்து தமது நிலைகளை விஸ்தரித்துள்ளது.
தற்போது வெள்ளா-முள்ளிவாய்க்காலில் விஸ்தரிப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது முன்னர் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் முசலியிலும் சம்பூரிலும் அமைக்கப்பட்ட முகாம்களை ஒத்தவையாக உள்ளன.
அங்கு புதிதாக கடற்படைக்கு சேர்க்கப்பட்ட இளைஞர்கள், வேலியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முயற்சிகள் நல்லிணக்க ஆட்சியிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில்சந்தேகங்கள் வலுவடைந்துள்ளன.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் கடற்படையினர் வலுவடைகின்றனர்....
Reviewed by Author
on
June 04, 2016
Rating:

No comments:
Post a Comment