அண்மைய செய்திகள்

recent
-

மகாராணியை நீக்க முடியாத பிரித்தானியாவை நம்ப முடியாது: பிரான்ஸ் மக்கள் கருத்து

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியிருந்தாலும் கூட மகாராணியை இதுவரை அவர்களால் நீக்க முடியவில்லை என்பதால் எந்த விடயத்திலும் அந்நாட்டை நம்புவதில் பயனில்லை என பிரான்ஸ் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலகமே எதிர்ப்பார்த்த பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தற்போது பிரித்தானியா விலகியுள்ளது.

யூன் 23ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விடுதலை பெற்ற நாள் என அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், பிரித்தானிய மக்களின் தீர்ப்பு குறித்து பிரான்ஸ் நாட்டு மக்கள் காரசாரமான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது பிரித்தானியாவிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்காது என ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரத்தால் இயங்கி வந்த பிரித்தானியா தற்போது சுதந்திரம் பெற்று சுயாட்சிக்கு திரும்பியுள்ளதற்கு அந்நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பு தான் காரணம் என கூறியுள்ளனர்.

ஆனால், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல ஊடகவியலாளரான கிறிஸ்டோபர் நியூன் டுவிட்டரில் ஒரு பரபரப்பு கருத்தை வெளியிட்டுருக்கிறார்.

அதில், ’ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விடுதலை பெற்றுருக்கலாம். ஆனால், மகாராணியை நீக்க முடியாத அந்நாட்டு மக்களை வேற எந்த விடயத்திலும் நம்பக்கூடாது’ என காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராணியை நீக்க முடியாத பிரித்தானியாவை நம்ப முடியாது: பிரான்ஸ் மக்கள் கருத்து Reviewed by NEWMANNAR on June 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.