தவசிகுளம் பாலவிநாயகர் முன்பள்ளி விளையாட்டு விழா,,,,,
தவசிகுளம் பாலவிநாயகர் முன்பள்ளி விளையாட்டு விழா இன்று(25.06.2016)மாலை பாலவிநாயகர் ஆலய பரிபாலன சபை உப செயலாளர் யோகநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவில் முன்னாள் MP வினோநதரலிங்கம் முன்னாள் மாகாண மாகாண சபை உறுப்பினர் MP நடராசா,முன்னாள் வவுனியா பிரதேச சபை உப தலைவர் ரவி,Dr.மதிதரன்,வ/பாரதி வித்தியாலய அதிபர் முரளிதரன்,தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணா,ஆலய முன்னாள் தலைவர் நந்தகுமார்,கந்தபுரம் கிராம சேவையாளர் உட்பட முன்பள்ளி ஆசிரியைகள்,பெரும் எண்ணிக்கையான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
முன்னாள் பி.சபை உப தலைவர் ரவியினால் அன்பளிப்பு செய்யப் பட்ட முன்பள்ளி சிறார்களுக்கான வாத்தியக் கருவிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
முன்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளோடு ஆசிரியைகள்,பெற்றோர்களுக்கான போட்டிகளும் நடைபெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன.
தவசிகுளம் பாலவிநாயகர் முன்பள்ளி விளையாட்டு விழா,,,,,
Reviewed by Author
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment