திருக்கேதீஸ்வரத்தில் இந்துக்கள் கூட்டுப்பிராத்தனை, -கனவான் ஒப்பந்தம் மீறப்படுவதாக குற்றச்சாட்டு -- [படங்கள் ]
மன்னார் மாந்தையில் அமைந்துள்ள உலகப்புகழ்ஈழத்தில் பாடல் பெற்ற இந்து ஆலயமான திருக்கேதீஸ்வரத்தில் 22-06-2016 அன்று காலை சில அடியவர்களால் கூட்டுப்பிராத்தனையும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராடடம் ஒன்றும் நடாத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இவ் ஆலயத்தின் அன்னதான மடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியில் சிலையொன்றினை நிறுவியதை தொடர்ந்து இந்த விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படட நிலையில், அவ்விடம் இந்துக்களுக்கு[திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு ] கிடைக்க இறையருள் வேண்டியே இந்த கூட்டுப்பிராத்தனை இடம்பெற்றுள்ளது
அண்மைக்காலமாக திருக்கேதீஸ்வரத்தின் வளாகமாக கருதப்படும் நிலங்களில்பல சமய முன்னெடுப்புக்களை எடுத்து வருவதுடன் ஆலயத்தினுள் நுழையும் வழிகளான மன்னர் வவுனியாவீதி , தள்ளாடி ஊடான மன்னார் யாழ்ப்பாண வீதி , அடம்பன் மன்னார் வீதி ஆகிய வீதிகளின் நுழைவாயிகளில் எல்லாம் பாரிய சிலைகளை அமைத்து வருவதும் ஆலய வளாகத்தில் சிலைகளை அமைப்பதும் மன்னார் மட்டுமல்லாது ஆலயத்திற்கு வருகைதரும் அனைத்து இந்துக்களுக்கும் விடயமறிந்த உலகெங்கும் வாழும் இந்துக்களுக்கும் சில நடுநிலையாளர்களுக்கும் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களின் நல்லொழுக்கத்திற்காகவும் உயிர்களிடம் அன்பு செலுத்துவதற்காகவும் உருவான அல்லது உருவாக்கப்படட மதங்கள் அதன் பெயரால் மனிதத்துவத்துக்கு சவால் விடுவது பொருத்தமற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது .
எனவே சம்பந்தப்படட தரப்புக்கள் சுமுகமான முறையில் பேசி அமைதி வழி தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.

கனவான் ஒப்பந்தம் மீறப்படுவதாக குற்றச்சாட்டும்
மன்னார் இந்து மகா சபை
மன்னார் இந்து மகா சபை
இது தொடர்பாக ஏற்கனவே இந்து மகாசபை வெளியிட்ட அறிக்கை ....
மன்னார் மாவடடத்தில் அமைந்துள்ள திருக்கேதீச்சர ஆலயம் இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்படட இந்துக்களின் புனித தலமாகும்.மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய 3ம் முறையாக பத்தி திருக்கேதீச்சரம் .கேது,மயன் ,மாதுவட்டா ,மண்டோதரி,இராமர்,அகத்தியர்,முதலான பெருந்தவத்தோர் இவ் ஆலயத்தினை வழிபட்டதாக அறிகின்றோம்.
7ம்,8ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருஞான சம்பந்தமூர்த்தி,சுந்தரமூர்த்தி நாயன்மார்களினால் பாடல்பெற்ற இத்தலம் உலகம் முழுவதிலும் வாழ்கின்ற இந்துக்களினால் பூசிக்கப்பட்டு வருகின்ற மிகவும் அருள் மிக்க, புகழ்மிக்க கேதீச்சர ஆலயம் 1590ம் ஆண்டு போர்த்துக்கேயர் மன்னாரை கைப்பற்றியபோது உடைக்கப்பட்டு உடமைகளும் கொள்ளையிடப்பட் டன.
இதன் பின்னர் போர்த்துக்கேயர் இப் பகுதியில் ஒரு மாதா கோயிலை அமைத்துக் கொண்டனர்.போர்த்துக்கேயர் வருகையின் பின்னர் வருகை தந்த ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்தை சார்ந்தபடியால் மாதாவை வழிபட விரும்ப வில்லை .இதனால் இங்கிருந்த மாதா சொரூபம் எடுத்து செல்லப்பட்டு மடுவில் வைத்து வணங்கியதாக கூறப்படுகின்றது.
1894ம் ஆண்டு திருக்கேதீச்சர ஆலயம் இருந்த இடம் கண்டறியப்பட்டு இப்பகுதியில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் பின் காலத்திற்கு காலம் புனரமைக்கப்பட்டும் வந்துள்ளது.கேதீச்சர ஆலயத்துக்கு செல்லும் பாதை திருக்கேதீச்சர கோயில் வீதி ஆரம்பத்தில் கிராம சங்கத்தினரால் பராமரிக்கப்பட்டு பின்னர் பொதுச் சேவை திணைக்களத்தினராலும்,பெருந்தெருக்கள் திணைக்களத்தினராலும்,வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் ,தற் சமயம் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினராலும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இப் பாதை மன்னார்-பூநகரி வீதியிலுள்ள மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீச்சர ஆலயத்திற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.இப்ப பாதையில் மேற்கு புறமாக மன்னார் பூநகரி வீதியில் வடக்கு பக்கத்தில் 1950ம் ஆண்டில் கத்தோலிக்க மத குகைக்கோயில் அமைக்கப்படட பொழுது மன்னார் அதிகாரியினால் தடுக்கப்பட்டது.. அப்பொழுது யாழ் ஆயர் எமிலியானுப்பிள்ளை திருக்கேதீச்சர ஆலய திருப்பணித் தலைவர் சேர் கந்தையா வைத்தியநாதனுடன் தொடர்பு கொண்டு குகைக்கோயில் அமைக்க உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார்.
கேதீச்சர ஆலயத்திற்கு பெருமளவிலான யாத்திரிகள் செல்லும் பாதையில் ஒரு கத்தோலிக்க ஆலயம் நிறுவப்படும் இடத்தில் மத ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் இந்து மதத்தினர் இதனை எதிர்த்தனர்.
இவ் இடத்திலொரு குகை கோயில் அமைக்க கத்தோலிக்க மக்கள் முயற்சி எடுக்கும் பொழுது இதனை தடுப்பதினால் கத்தோலிக்க மக்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு உட் படுவார்கள் என்றும் இக் கோவிலுக்கு 1/4 அல்லது 1/2 ஏக்கர் காணிக்கு மேல் தேவைப்படாது எனவும் இதற்கான முகப்பு மன்னார் பூநகரி வீதியில் அமையும் எனவும் வணக்கத்துக்குரிய ஆயர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆயர் அவர்களும் சேர் வைத்தியநாதன் அவர்களும் ஒரு கனவான் ஒப்பந்தத்தை 30.01.1964ம் ஆண்டு எழுதிக்கொண்டனர்.
திருக்கேதீச்சர ஆலய இரு மருங்கிலும் பொது வேலை,பகுதி வேலைத்தளம் தற்சமயம் வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமானநிலத்தை தவிர,மற்றைய பகுதிகளில் இந்து சமய மக்களுக்கும்,அவர்களுக்கு சொந்தமான பொதுக்கட்டிடங்களும் அமைந்திருந்தன.தற்பொழுது குகை கோயில் இருந்த இடத்திற்கு மேலதிகமாக உள்ள இடத்தில் பெரிய மாதா ஆலயத்தை அமைத்து பழம் பெரும் புனித தலமான திருக்கேதீச்சர ஆலய முகப்பினை மறைக்கக் கூடிய விதத்தில் அமைந்துள்ளமை இந்து மக்களுக்கு மிகவும் மன வருத்தத்தை தருவதாக உள்ளது.
இதைவிட மேலும் கூடுதலான நிலங்களை பிடித்துக்கொண்டிருப்பது எழுதப்பட்ட கனவான் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.கேதீச்சர ஆலயத்தின் புனித தீர்த்தக்குளமாகிய பாலாவி குளமும் மாசடைய கூடியதாக இருக்கும் என கவலை அடைகின்றோம்.திருக்கேதீச்சர ஆலயத்தின் தொன்மையையும் புனித தன்மையையும் ஏற்று நடக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மன்னார் இந்து மகா சபை
திருக்கேதீஸ்வரத்தில் இந்துக்கள் கூட்டுப்பிராத்தனை, -கனவான் ஒப்பந்தம் மீறப்படுவதாக குற்றச்சாட்டு -- [படங்கள் ]
Reviewed by NEWMANNAR
on
June 23, 2016
Rating:

No comments:
Post a Comment