அண்மைய செய்திகள்

recent
-

மக்கள் தீர்ப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியது பிரிட்டன்

பிரிட்டன் பொதுவாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட வரும் நிலையில் முன்னிலை நிலவரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக சாதகமாக இருப்பதால் மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள் | படம்: ஏ.எஃப்.பி.
பொது வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியானது. இக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் முதல் நாடானது பிரிட்டன்.

வாக்கெடுப்பு முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து 52% மக்களும், அதில் நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து 48% மக்களும் வாக்களித்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதியானது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா, விலகுவதா என்பது குறித்து பிரிட்டனில் நேற்று (வியாழக்கிழமை) பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. நேற்று நடந்த பொது வாக்கெடுப்பில் 72% வாக்குகள் பதிவாகியிருந்தன.

பொது வாக்கெடுப்பு ஏன்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. அந்த நாடுகள் ஒரே கூட்டமைப்பாக செயல்படுகின்றன. யூரோ என்ற பொது கரன்சியை பயன்படுத்துகின்றனர். உறுப்பு நாடுகளில் விசா இன்றி பயணம் செய்யவும் எந்த நாட்டிலும் தங்கிப் பணியாற்றவும் முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனும் உறுப்பு நாடாக உள்ளது. ஆனால் யூரோ கரன்சியை பிரிட்டன் ஏற்கவில்லை, தொடர்ந்து பவுண்ட் கரன்ஸியை மட்டுமே புழக்கத்தில் வைத்துள்ளது. மேலும் இதர ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் குடியேறுவதை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை.

இதுபோன்ற காரணங்களால் ஐரோப்பிய ஒன்றிய விதிகளில் சில மாற்றங்களை செய்யுமாறு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தி வருகிறார்.

இந்தப் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா, விலகுவதா என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமர் டேவிட் கேமரூன் உட்பட பாதி பேர் ஒன்றியத்தில் நீடித்திருக்கவும் மீதி பேர் விலகவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்க விரும்புகின்றனர்.

ஒன்றியம் உடையும் ஆபத்து:

சுவீடன் வெளியுறவு அமைச்சர் மார்கட் வால்ஸ்ட்ராம் கூறியதாவது: பிரிட்டன் வெளியேறினால் மற்ற நாடுகளிலும் இதுபோன்ற பொது வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளது, தங்கள் நாடுகளுக்கு தகுந்தவாறு ஒன்றியத்தின் விதிகளை மாற்றம் செய்ய முயற்சிப்பார்கள். இதனால் ஐரோப்பிய ஒன்றியம் உடையக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் தீர்ப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியது பிரிட்டன் Reviewed by NEWMANNAR on June 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.