வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்தால் விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் தடுக்கலாம் – அமைச்சர் பா.டெனிஸ்வரன்
வடமாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் என்பவற்றின் அனுசரணையுடனும் வழிகாட்டலுடனும் முன்னெடுக்கப்படும் இலங்கை போக்குவரத்துத் சபை மற்றும் தனியார் போக்குவரத்து சங்க சாரதிகள், நடத்துனர்களுக்கான வீதி ஒழுங்கு விதிகள் மற்றும் விபத்துக்களைத் தடுத்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு யாழ் மாவட்டத்தில் இன்று 23.06.2016 காலை 9.00 மணியளவில் யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டு உரையாற்றும் போது வீதி ஒழுங்குகளை சரியான முறையில் கடைப்பிடித்தால் விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் தடுக்கலாம் எனவும் வடமாகணத்தில் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு தாம் விசேட செயற்திட்டத்தை தனது அமைச்சினூடாக ஆரம்பித்துள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்குமான வீதி ஒழுங்கு விதிகள் சம்பந்தமான இச்செயற்திட்டம் மாவட்ட ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இச்செயற்திட்டம் பாடசாலை மாணவர்களுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் வடமாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிரபகரமூர்த்தி, முன்னாள் ஆணையாளர் கேதீஸ்வரன், இ.போ.ச பயிற்சிப் பாடசாலை அதிபர் வரதராஜன், இ.போ.ச பயிற்சிப் பாடசாலை வளவாளர் ஜேசுதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்தால் விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் தடுக்கலாம் – அமைச்சர் பா.டெனிஸ்வரன்
Reviewed by Author
on
June 23, 2016
Rating:

No comments:
Post a Comment