அண்மைய செய்திகள்

recent
-

சுமந்திரனுக்கு ஆதரவான உறுப்பினர்களால் குழப்பம் பங்காளி கட்சித்தலைவர்கள்சம்பந்தனிடம் குற்றச்சாட்டு

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு ஆதரவாக இருந்த கொண்டு வடக்கு மாகாண சபையை இயங்க விடாது சில உறுப்பினர்கள் குழப்புகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனிடம் நேரடியாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனிடம் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேவேளை குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் விரைவில் வட மாகாணசபை உறுப்பினர்களை அழைத்து பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் கூட்டம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலு வலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர்களின் விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு ஆதரவாக கொண்டு இருந்து வடக்கு மாகாண சபையை குழப்புவது போன்ற பல விடயங்கள் இக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் இவற்றை நிறுத்த வேண் டும்.

மாகாண சபையை ஒழுங்காக இயங்கவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வடமாகாண சபையில் தீர்வுத் திட்டம் கொண்டு வரப்பட்டபோது வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற விடயத்தை இந்தக்குழு ஏற்கவில்லை.

இந்தக் குழுவிலுள்ள முஸ்லிம் உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தேசியப்பட்டியலில் தான் வந்தவர்.ஆகவே எங்களுக்கு கிடைத்த தேசியப்பட்டியலில் ஒருவருடத்திற்கு ஒருவர் என மாற்றிக் கொடுக்கின் றோம்.

அதேபோன்று முஸ்லிம் உறுப்பினருக்கு கொடுத்ததில் ஒருவரை ஏன் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்?அவருக்குப் பதிலாக இன்னொரு முஸ்லிமை நாம் நியமிக்க முடியும் தானே போன்ற விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டன.

இது சம்பந்தமாக நாம் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று சம்பந்தன் கூறினார் எனவும்,
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து வட மாகாண சபை உறுப்பினர்களையும் அழைத்து விரைவில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக சம்பந்தன் கூறினர் என இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சுமந்திரனுக்கு ஆதரவான உறுப்பினர்களால் குழப்பம் பங்காளி கட்சித்தலைவர்கள்சம்பந்தனிடம் குற்றச்சாட்டு Reviewed by NEWMANNAR on June 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.