பாராளுமன்ற வளாகத்தில் கைகலப்பு - மீண்டும் பதற்ற நிலை
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைதுசெய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, விசேட கோரிக்கையை முன்வைத்தார்.
அதன்போது, ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
அவர் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
இந்த நிலையால் நாடாளுமன்றத்தில் சூடான நிலையும் ஏற்பட்டு 20 நிமிடங்கள் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே வளாகத்தில் இருந்தபோது, மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் ரஞ்சன் ராமநாயக்க இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது அநுரகுமார திஸாநாயக்க இருவருக்கும் இடையிலான சண்டையை விளக்குவதற்கு முற்பட்டார் என தெரிவிக்கப்படடுகின்றது.
பாராளுமன்ற வளாகத்தில் கைகலப்பு - மீண்டும் பதற்ற நிலை
Reviewed by NEWMANNAR
on
June 21, 2016
Rating:

No comments:
Post a Comment