அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையை ஆளப் போகும் அந்த பலமான நபர் யார்? பரபரப்பு தகவலை வெளியிட்ட ஜோதிடர்!!


இலங்கையில் அரசியல் மட்டுமின்றி வேறு பல சம்பவங்கள் தொடர்பிலும் சோதிடர்கள் ஆரூடம் கூறுவது கடந்த காலங்களில் பொதுவாக காணக்கூடிய ஒரு விடயமாக உள்ளன.

இதன்காரணமாக பல சோதிடர்கள் இல்லாமல் போனமையும், பலர் இதனால் பிரபலமடைந்தமையும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

எப்படியிருப்பினும் நாட்டின் எதிர்காலம் மற்றும் அரசியல் எதிர்காலம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வத்தில் இருப்பதாக அறிந்து கொள்ள முடிந்துள்ளன.

கடந்த காலங்களில் சலாவ தீ விபத்து உட்பட பல ஆரூடங்கள் சரியான முறையில் கூறி சமூகத்தின் அவதானத்தை பெற்றுக்கொண்ட சோதிடர் திலக் சில்வா நாட்டின் பிரதான 4 அரசியல்வாதிகள் தொடர்பில் ஆரூடம் கூறியுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அரசாங்கம் அவ்வாறே தொடரும். சிலரின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும். அரசியல் தலைமைத்துவத்திற்கு புதிய கதாபாத்திரங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்காலம்?

அவர் 1951ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் அவரது வயது 65 ஆகும். அவருக்கு அமைச்சர்கள் உறுப்பினர்களுடன் நெருக்கடியான நிலை ஏற்படலாம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நேரம் எவ்வாறு உள்ளன? அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வர முடியுமா?

2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் அவர் மேலும் பலவீனமடைந்தாலும் இருக்கும் இடத்தை விடவும் சிறப்பாக இருப்பார். 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அவருக்கு தற்காலிக சிறப்பான நிலை ஏற்பட வாயப்புகள் உள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நிலை எவ்வாறு?

அவரது நேரத்திற்கமைய அவருக்கு யோக அதிகாரங்கள் ஓர் அளவிற்கு கனவாகிவிட வாய்ப்புகள் உள்ளன. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ராஜயோகமாக செயற்படும். எப்படியிருப்பினும் 2019ம் ஆண்டு அதிகாரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படும்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் தொடர்பில் ஆரூடம் கூற முடியுமா?

அவரது ஜாதகத்திற்கமைய அவர் வலுவடையும் முறை காணப்படுகின்றது. எனினும் கிரக மாற்றத்திற்கமைய அரசியலில் அதிகாரத்திற்கு வருவதில் சிக்கல் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை ஆளப் போகும் அந்த பலமான நபர் யார்? பரபரப்பு தகவலை வெளியிட்ட ஜோதிடர்!! Reviewed by Author on June 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.