இறந்துப்போன பெண்ணை தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்கள்....
இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த பெண் ஒருவரை அம்மாநில மக்கள் தேர்தலில் வெற்றி பெற வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள திகவ்லி என்ற கிராமத்தில் மித்லேஷ் தேவி என்ற பெண் தனது கணவரான சிகந்தர் முகியாவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே எழுந்த தகராறில் கணவர் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்றளவும் கணவரான சிகந்தர் தலைமறைவாக தான் உள்ளார்.
இது போன்ற ஒரு சூழலில் அந்த கிராமத்தில் பஞ்சாயத்து சமிதி தேர்தல் நடந்துள்ளது. இதில், வேட்பாளாராக கொலை செய்யப்பட்ட மித்லேஷ் தேவியின் ஆவணங்களை சமர்பித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், பஞ்சாயத்து முடிவுகள் வெளியானபோது கொலை செய்யப்பட்ட அப்பெண் வெற்றி பெற்றவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் பேசியபோது, ‘சிகந்தர் தனது 2-வது மனைவி குதியா தேவி என்பவரை தனது முதல் மனைவியின் ஆவணங்கள் மூலம் பஞ்சாயத்து சமிதி தேர்தலில் நிறுத்த முயற்சி செய்திருப்பார். கொலைக்குற்றவாளியான இவர் இதன் மூலம் குற்றத்திலிருந்து தான் விடுவிக்கப்படுவோம் என்று நினைத்திருக்கலாம்’ என விளக்கம் அளித்துள்ளார்.
முறைகேடாக நடைபெற்றுள்ள இந்த பஞ்சாயித்து தேர்தல் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துப்போன பெண்ணை தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்கள்....
Reviewed by Author
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment