அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் நடக்கும் மாபெரும் கல்யாணக் கொண்டாட்டம்....


திருமணம் தொடர்பான வைபவங்களை லண்டனில் ஆரம்பித்து 3வது முறையாக செல்வி வைஷ்ணவி ஆனந்தின் நெறியாள்கையில் திருமணக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வு கல்யாண வைபவங்களுக்காக உள்ள 80க்கும் மேற்ப்பட்ட வர்த்தகர்களுடைய கண்காட்சியுடனும், நூற்றுக்கணக்கான அழகிய பெண்களின் ஆடை அலங்கார அணிவகுப்புடனும் இரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வருகைகளுடனும் மிகச்சிறப்பாக நடைபெற்றிருந்தது.

புதிதாய் திருமணம் செய்ய இருப்பவர்களின் குழப்பத்தை போக்கவும், சரியான உணவு, உடை, அலங்காரம், மண்டபம் போன்ற சேவைகளை செய்யும் வர்த்தகர்களை தேர்ந்தெடுக்கவுமே இந்த கண்காட்சியை ஒருங்கிணைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டும் இளைஞர்களின் அணியைக் கொண்டு சிறப்பான முறையிலும் சற்று வித்தியாசமான முறையிலும் The Tamil Wedding 2016 நிகழ்வை வரும் சனிக்கிழமை 18ம் திகதி லண்டன் Feltham பகுதியில் உள்ள நக்ஷத்ரா கல்யாண மண்டபத்தில் நடாத்த உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், அரங்கம் அதிரும் இசை, கண்கவர் நடனம் என லண்டன் வாழ் கலைஞர்களான கோபினி, ரமீனா, பேபி சுப்ரம் மற்றும் GJ Arts குழுவின் Soul & Harmony இசைக்குழுவின் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. சிறப்பு நிகழ்வாக why this kolaveri பாடலை ஆங்கிலத்தில் பாடி உலகப் புகழ் பெற்றிருக்கும் கலைஞர் அர்ஜுன் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

இந்நிகழ்வை தொகுத்து வழங்க Tamilol நிபுணரும், பாடலாசிரியரும், இயக்குனருமான Dayan Shan உடன், Braha Bala மற்றும் விதுஜன் ஆறுமுகம் ஆகியோரும் வருகை தர உள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்

இந்த நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரணை வழங்குவதில் பெருமையடைகிறது. உங்களது நிகழ்வுகளுக்கும் லங்காசிறியின் இலவச ஊடக அனுசரணை வழங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் pr@lankasri.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

லண்டனில் நடக்கும் மாபெரும் கல்யாணக் கொண்டாட்டம்.... Reviewed by Author on June 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.