வவுனியாவில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர்த்தக சங்கம் ஆதரவு வழங்க மறுப்பு
வவுனியாவில் நாளை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்கம் ஆதரவு வழங்கவில்லை என வர்த்தக சங்கத் தலைவர்.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா, தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையததை அமைக்க வேண்டும் என வலியுறுத்தின தினச்சந்தை வியாபாரிகளால் நாளை (27.06) உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் வர்த்த சங்கத்தின் நிலைப்பாடு என்ன எனக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துரைத்த அவர்,
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் எமக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எமது சங்கம் இது தொடர்பில் கலந்துரையாடி இநத உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை, மத்திய அமைச்சர் ஒருவர் பின்னால் நின்று சிலர் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
வவுனியா, தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையததை அமைக்க வேண்டும் என வலியுறுத்தின தினச்சந்தை வியாபாரிகளால் நாளை (27.06) உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து மேலும் கருத்துரைத்த அவர்,
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் எமக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எமது சங்கம் இது தொடர்பில் கலந்துரையாடி இநத உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை, மத்திய அமைச்சர் ஒருவர் பின்னால் நின்று சிலர் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
வவுனியாவில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர்த்தக சங்கம் ஆதரவு வழங்க மறுப்பு
Reviewed by NEWMANNAR
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment