இன்றைய (03-07-2016) கேள்வி பதில்
கேள்வி :−
என் அன்பிற்குரிய சட்டத்தரணி சுதன் அண்ணா!என் பெயர்(×−×−)அம்பாறை(×−×−×−)சேர்ந்தவள்.நான்(×−×−×)பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிகிறேன்.
என் வயது 38.என் கணவரின் வயது 46.என் கணவர் மிகவும் நல்லவர்.எங்களுக்குள் நல்லுறவே இருந்து வருகிறது.ஆனால் சமீப காலமாக அவர் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அவர் அலுவலத்தில் வேலை செய்யும் பெண்ணிற்கும், இவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.அந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன் கணவரை இழந்தவர்.இதைப் பற்றி என் கணவரிடம் கேட்ட போது "ஆம்"என்று ஒத்து கொண்டாலும் அவரால் அவளை விட முடியவில்லை. அவள் என் கணவருக்கு ஏதோ செய்வினை செய்து விட்டதாக நண்பர்கள் கூறுகின்றனர்.இதை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?
பதில் :-
அன்பான சகோதரியே!இதை போன்ற பிரச்சனை அனேகமானவர்களுக்குண்டு.கணவன்−மனைவி இடையே உண்மையான அன்பு இருந்தால் கடவுள் ஆண்/பெண் உருவத்தில் வந்தாலும் கடவுளைக்கூட நினைக்க மாட்டார்கள்.அதுதான் கணவன்−மனைவி புனிதமான உறவு.கணவன்/மனைவியானவள் இன்னொரு பெண்ணை/ஆணை தொடும்போது தன் மனைவி/கணவனுக்கு வலிப்போதை போன்று தான் உணர வேண்டும்(பரிசுத்தமான மனைவி/கணவனாயின் அந்த நிலையில் அந்த வலியினை டெலிப்பதி மூலமாக உணருவார்)
உங்கள் கணவர் நல்லவர்.உங்களுடன் அன்பாக இருக்கிறார் என்பதால் நடந்த தவறுக்கு அந்த பெண்ணை மட்டும் குற்றம் கூறும் ஒரு மன நிலை தான் அவள் செய்வினை செய்து விட்டாள் என்று கூறுவதாகும்.இந்த மாயையிலேயே அனேகமானவர்கள் ஒருவர் மீது அன்பு,விசுவாசம் வைத்திருந்தால்,அவர் தவறு செய்திருப்பினும் அத் தவறினை எதிர் வாதி மீது போடுவது மனித இயல்பாகும்.இதுவும் ஒருவகை பாவச் செயலாகும்.இதனாலேயே தவறு செய்கின்றவர்கள் மேலும் தவறு செய்ய தூண்டுதலாக அமைகிறது.தாங்கள் இந்த விஷயத்தில் மற்றவர்களிடம் குறிப்பாக அவருடைய நண்பர்களிடம் இதைப் பற்றி விசாரிப்பது கூடாது.இப்பிரச்சனையை உங்கள் கணவர் மற்றும் அந்த பெண்ணுடன் பேசி தான் சரி செய்ய வேண்டும்.சாட்சி காரணை விட சண்டை காரனிடம் செல்வதே தங்கள் விடயத்தில் சிறந்தது.உங்கள் கணவர் இந்த விஷயத்தை ஒத்துக் கொண்டதிலிருந்து அவர் தெரிந்தேதான் அந்த பெண்ணுடன் பழகியிருக்கிறார் என்பது தெரிகிறது.திடீரென்று அந்த பெண் கணவரை இழந்ததால் அவர் மேல் ஏற்பட்ட இரக்கம் காலப் போக்கில் இம்மாதிரி உறவில் முடிந்திருக்கும்.எனவே தாங்கள் அந்தப் பெண்ணிடம் நேரில் மனம் விட்டு பேசுங்கள்.அந்த விதவைப் பெண் தங்கள் மீது இரக்கப்படலாம்.அந்த பெண் தங்கள் கணவரை விட்டு பிரிந்தால் பிரச்சனை தீர்த்து விட வாய்புள்ளது.இந்த முறையற்ற உறவை உங்கள் கணவரும் அந்த பெண்ணும் தொடர்வது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.எனவே இப்பொழுதே அவர்கள் இருவருடனும் சண்டை போடாமல் பேசி அந்த உறவை நிறுத்தி விடச் சொல்லுங்கள்.நடந்ததை மறந்து விட்டு இனி நல்ல முறையில் வாழலாம் என்று கணவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.முடியாவிட்டால் மூவரும் மன நல ஆலோசனை எடுத்துக் கொள்வது உகந்தது.அதிலும் திருந்தாவிடின் சட்ட நடவடிக்கை எடுங்கள்.இப்படிபட்ட கணவரோடு வாழ்வது விபச்சாரம் செய்வதற்கு சமமாகும்.
குறிப்பு
சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.
கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .

Reviewed by NEWMANNAR
on
July 03, 2016
Rating:

No comments:
Post a Comment