இன்றைய (18-07-2016) கேள்வி பதில்
கேள்வி:−
அன்பான வழக் கறிஞர் Suthanlaw அண்ணா!நான்(×−×−×)இருந்து பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரி.அண்ணா எனது கணவர் (×−×−)இல் பணியாளராக பணி புரிகிறார்.அவர் வேலை செய்யும் நிறுவனத்தில்(×−×−)ஐ திருடிவிட்டார்.அவரை அந்த நிறுவனம் வேலையிலிருந்து நிறுத்துமா?அதனை தடுக்க முடியாதா அண்ணா?
பதில்:−
அன்பான சகோதரியே!தங்கள் கணவர் செய்த குற்றத்திற்காக (×−×−)நிறுவனம் அவரை கடும் குற்றம் என்ற அடிப்படையில் எந்த பாதிப்பு தொகையும் கொடுக்காமல் வேலையை விட்டு நிறுத்தலாம்.இதற்கு நிறுவனம் பணியாளர் திருடினார் என்பதை நிருபிக்கவேண்டும்.திருடப்பட்ட பொருளுக்கான விலையை பணியாளரின் சம்பளத்திலிருந்து கழிக்கமுடியாது.ஆனால் போலீசில் புகார் கொடுத்து நீதிமன்றம் மூலமாக திருடப்பட்ட பொருளின் விலையை நட்ட ஈடாக கேட்கலாம்.
திருடப்பட்ட பொருளின் மதிப்பு மிக குறைவாகவும் பணியாளரின் வேலை வருட அனுபவம் அதிகமாகவும் இருந்தால்(பணிக் காலத்தில் குற்றமெதுவும் புரியாவிடின்)கடும் குற்றம் என்ற அடிப்படையில் வேலை விட்டு நிறுத்தமுடியாது.ஆனால் எச்சரிக்கை கடிதம் கொடுக்கலாம்.
பணியாளர் ஒருவர் இன்னொரு பணியாளரின் பொருளை திருடினால் அதற்காக வேலையை விட்டு நிறுத்தமுடியாது.பணியாளர் , நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளரின் பொருளை திருடினால் கடும் குற்றம் என்ற அடிப்படையில் வேலை விட்டு நிறுத்தலாம்.
சகோதரியே தங்கள் கணவர் செய்தது இலங்கை சட்டத்தின் படியும் குறித்த நிறுவனத்தின் சட்டத்தின் படியும் குற்றமென்பதனால் அந் நிறுவனம் எடுக்கும் இறுதி முடிவிற்கமைய தண்டனை தங்கள் கணவருக்கு கிடைக்கும்.அதனை தவிர்க்க முடியாது.

Reviewed by NEWMANNAR
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment