அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு! இரா.சம்பந்தன் மறுப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தடம் மாறுகின்றதா தமிழ்த்தேசியம் என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்துப் பகிர்வு நிகழ்வு மன்னாரில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது தமிழ் தேசியக் கூட்மைப்பு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, சர்வதேச அரங்கில் சரியான முறையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னெடுக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தவறிவிட்டார்கள்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையில்லை. கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாண சபை ஆளுமையுடன் செயற்படவில்லை.

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் விடயத்திலும் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை இல்லை.

கூட்டமைப்பினால் சரியானதொரு தீர்மானத்தை எடுக்க முடியாதிருப்பது குறித்தும் இதன் போது கண்டனம் வெளியிடப்பட்டது.

எனினும், குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இரா.சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், பொறுப்பு கூறும் விடயத்தில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

முக்கியமாக தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடைய எண்ணம் ஈடேறத்தக்க வகையில் தமிழ்த் தரப்பினர் குழப்பக் கூடாது என்றும் தமிழ் மக்கள் நிதானமாகவும் பொறுப்போடும் செயற்பட வேண்டும் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.





கூட்டமைப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு! இரா.சம்பந்தன் மறுப்பு Reviewed by NEWMANNAR on July 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.