2016ம் ஆண்டு மாகாண மட்ட தடகள விளையாட்டு நிகழ்வில் சாதனை படைத்த மன்/புனித ஆனாள் ம.ம.வி.வீர வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு
மேற்படி தடைகள விளையாட்டு நிகழ்வில் மன்/புனித ஆனாள் ம.ம.வி.22 தங்க பதக்கங்களையும்,14 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று மாகாண மடடத்தில் 3ம் இடத்தினையும் பெற்று வெற்றி வாகை சூடி உள்ளது இதில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு25.07.2016 திங்கட்கிழமை காலை 7.30மணிக்கு பாடசாலை ஒன்று கூடல் மைதானத்தில் பிரதி அதிபர் திருமதி.A.R.M.Rபிகிறாடோ தலைமையில் இறை வணக்கத்துடன் நடை பெற்றது.
இந் நிகழ்விற்கு மன்னார் வலய கல்வி பணிப்பாளர் திரு.S.S.செபஸ்தியான் அவர்களும்,வங்காலை பங்கு தந்தை அருட்பணி S.ஜெயபாலன் அவர்களும்,முன்னை நாள் வலய கல்வி பணிப்பாளர் திரு.M.A .ரெவ்வல் அவர்களும்,நானாட்டான் கோட்ட கல்வி பணிப்பாளர் திரு.T ஜெகநாதன் அவர்களும் உடற் கல்வி உதவி கல்வி பணிப்பாளர்திரு.P .ஞானராஜ் அவர்களும், ஏனைய வலய கல்வி பிரதி பணிப்பாளர்களும்,S .D.C.செயலாளரும்,O .B .A.உறுப்பினர்களும்,மற்றும் பெற்றோர்களும் வருகை தந்து வாழ்த்தியதுடன் கௌரவித்து பரிசில்களையும் வழங்கினார்கள்.
2016ம் ஆண்டு மாகாண மட்ட தடகள விளையாட்டு நிகழ்வில் சாதனை படைத்த மன்/புனித ஆனாள் ம.ம.வி.வீர வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு
Reviewed by NEWMANNAR
on
July 26, 2016
Rating:
No comments:
Post a Comment