டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா 2 சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர் கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
January 09, 2026
Rating:


No comments:
Post a Comment