அண்மைய செய்திகள்

recent
-

யூரோ கிண்ணம்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த போர்த்துக்கல்


யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 1-0 என வீழ்த்திய போர்த்துக்கல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

ஐரோப்பிய அணிகள் மட்டும் பங்கேற்கும் 15வது யூரோ கிண்ண கால்பந்து தொடர் பிரான்சில் நடைபெற்றது.

இதில் பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் நகரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 8வது இடத்திலிருக்கும் ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி, 17வது இடத்திலிருக்கும் பிரான்ஸ் அணியை சந்தித்தது.

சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய பிரான்ஸ் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

அழுதபடி வெளியேறிய ரொனால்டோ

போட்டியின் 25வது நிடத்திலேயே போர்த்துக்கல் அணியின் தலைவர் ரொனால்டோ காயம் காரணமாக மைதானத்திலிருந்து அழுதபடியே வெளியேறினார்.

இதனால் அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முனைப்பில் கோல் போஸ்ட்டை முற்றுகையிட ஆட்டத்தில் அனல் பறந்தது.



அனல் பறந்த ஆட்டம்

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தும் பலனளிக்காததால், முதல் பாதி ஆட்டம் சமநிலை வகித்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும், இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கினர்.

ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் (90வது நிமிடத்தில்) பிரான்ஸ் வீரர் கிக்னாக், 6 அடி தொலைவிலிருந்து அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேற பிரான்ஸ் ரசிகர்கள் மவுனத்தில் உறைந்து போயினர்.

ஆட்ட நேர முடிவில் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.

யூரோ "ஹீரோ" ஈடர்

கூடுதல் நேரத்தில் 109வது நிமிடத்தில் ரெனாட்டோ சான்சஸூக்கு பதிலாக களமிறங்கிய போர்த்துக்கல் அணியின் ஆன்டனியோ ஈடர் ஒரு கோல் போட்டு அசத்தினார். இதனால் போர்த்துக்கல் 1-0 என முன்னிலை பெற்றது.

இதுவே போர்த்துக்கல் அணிக்கு வெற்றி கோலாகவும் அமைந்தது. போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது.

இதன் மூலம் யூரோ கிண்ண கால்பந்து தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது போர்த்துக்கல் அணி.




யூரோ கிண்ணம்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த போர்த்துக்கல் Reviewed by Author on July 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.