கூட்டமைப்பின் கோரிக்கையால் உள்ளக விசாரணையே இல்லாமல் போகும்! அனைவரையும் பாதித்த கொடிய யுத்தம்! அனைவரையும் பாதித்த கொடிய யுத்தம்!
யுத்தக்குற்றம் குறித்த உள்ளக விசாரணையே இல்லாமல் போகக்ககூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
உள்ளக விசாரணைப்பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், கூட்டமைப்பின் இந்த கோரிக்கையின் காரணமாக உள்ளக விசாரணையே இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்விடயத்தில் கூட்டமைப்பு யதார்தமாகவும், நுட்பரீதியாகவும் சிந்திக்க வேண்டும்.
யுத்தத்தின் போது இடம்பெற்றவை தொடர்பில் தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டதை போன்று உண்மையை கண்டிறியும் ஆணைக்குழுவை நியமித்து நடந்தவை குறித்து விசாரணை செய்ய முயற்சிக்கின்றோம்.
இந்நிலையில், சர்வதேச நீதிபதிகளை கோருவதன் மூலம் இம்முயற்சிகள் வெற்றியளிக்காது போய்விடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது.
இதேவேளை, விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதற்கு இடம்மில்லை. எனவே அரசியல் அமைப்பினை மீறி ஒரு போதும் செயற்பட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் கோரிக்கையால் உள்ளக விசாரணையே இல்லாமல் போகும்! அனைவரையும் பாதித்த கொடிய யுத்தம்! அனைவரையும் பாதித்த கொடிய யுத்தம்!
Reviewed by Author
on
July 04, 2016
Rating:

No comments:
Post a Comment