தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்று நிருபத்தில் திருத்தம்...
தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்று நிருபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தரம் ஒன்றுக்கான மாணவர்களை சேர்ப்பது தொடர்பில், அண்மித்த பாடசாலை உள்ளிட்ட அனைத்து வகையீடுகள் குறித்த நேர்முகத் தேர்வுகளின் போதும் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவரை நியமிக்கக் கூடிய வகையில் சுற்றுநிருபத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் பழைய மாணவர் என்ற அடிப்படையிலான வகையீட்டின் கீழ் விண்ணப்பத்தவர்களின் நேர்முகத் தேர்வு மற்றும் மேன்முறையீடு ஆகிய வகையீடுகளின் போதான குழுவில் மட்டுமே பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அங்கம் வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டுக்கு தரம் ஒன்றுக்கான மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் இந்த சுற்றுநிருபத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30ம் திகதியுடன் விண்ணப்பம் செய்வதற்கான காலம் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்று நிருபத்தில் திருத்தம்...
Reviewed by Author
on
July 07, 2016
Rating:

No comments:
Post a Comment