டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த பிராவோ....
மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான வெய்ன் பிராவோ, டி20 போட்டிகளில் 1,000 ஓவர்கள் வீசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உலகம் முழுவதும் ஏராளமான லீக் தொடர்களில் விளையாடி வரும் சகலதுறை வீரரான பிராவோ பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 தொடர்களில் ஆடி வரும் பிராவோ, தற்போது நடக்கும் கரீபியன் பிரீமியர் லீக்கில் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் அவர் டி20 போட்டிகளில் 1000வது ஓவரை வீசி சாதனை படைத்தார்.
இதற்கு முன் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும், 5 ஆயிரம் ஓட்டங்களுடன் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த பிராவோ....
Reviewed by Author
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment