எய்ட்ஸ் நோய் தொடர்பாக பரிசோதனை செய்துக்கொண்ட பிரித்தானிய இளவரசர்....
எய்ட்ஸ் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கும் பிரித்தானிய இளவரசரான ஹரி மருத்துவமனை ஒன்றில் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொண்டார்.
உயிர் கொல்லியான எய்ட்ஸ் நோய் குறித்து பொதுவாக விவாதிக்கப்பட்டாலும், அதனை மருத்துவனையில் பரிசோதனை செய்துகொள்ள பொதுமக்கள் இன்றளவும் தயங்கி வருகின்றனர்.
இந்த எய்ட்ஸ் நோய் குறித்து முன்னாள் பிரித்தானிய இளவரசியான டயானா உயிருடன் இருந்தபோது எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
லண்டன் நகரில் எய்ட்ஸ் நோய் தொடர்பாக சிகிச்சை அளிக்கும் Mildmay என்ற மருத்துவமனைக்கு டயானா அடிக்கடி சென்று தன்னை பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தற்போது தாயார் வழியை பின்பற்றும் இளவரசர் ஹரியும் லண்டன் நகரில் உள்ள மருத்துவனை ஒன்றில் தன்னை பரிசோதனை செய்துக்கொண்டுள்ளார்.
எய்ட்ஸ் நோய் குறித்து பொதுமக்களும் தயங்காமல் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பரிசோதனையை இளவரசர் ஹரி செய்துள்ளார்.
இந்த பரிசோதனையில் இளவரசர் ஹரிக்கு ‘Negative’ என முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
எய்ட்ஸ் நோய் தொடர்பாக பரிசோதனை செய்துக்கொண்ட பிரித்தானிய இளவரசர்....
 
        Reviewed by Author
        on 
        
July 15, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
July 15, 2016
 
        Rating: 


No comments:
Post a Comment