அண்மைய செய்திகள்

recent
-

இணையத்தில் ஏலம் விடப்படும் யாஸிதி பெண்கள்: கொடூரத்தின் உச்சகட்டம்...


ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தப்பட்ட யாஸிதி இளம்பெண்களை இணையத்தில் ஏலம் விட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் கூட்டமாக கடத்தப்பட்ட யாஸிதி பெண்களை தற்போது இணையத்தில் அவர்கள் ஏலம் விட்டுள்ளனர்.

இதுகுறித்த ரகசிய விளம்பரங்களை அரபி மொழியில் சங்கேத குறிகளுடன் குறிப்பிட்ட நபர்களுக்கு பரப்பி வருகின்றனர்.

அதில் அழகான இளம்பெண் 12,500 டொலர் விலை எட்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒட்டு மொத்தமாக 3,000 பெண்கள் மற்றும் குழந்தைகளை செக்ஸ் அடிமைகளாக ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இளம்பெண்களை தற்போது இணையத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டு விலை பேசி வருகின்றனர். இரண்டு குழந்தைகள் கொண்ட தாயாருக்கு அந்த அமைப்பு இட்டிருக்கும் விலை 3,700 டொலர்கள்.

முக்கியமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈடுபடுவதற்கு காரணமாக கூறப்படுவது நிதி நெருக்கடி என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

யாஸிதி இளம்பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திவிட்டு அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, இதை அறியவரும் பெற்றோர்களிடம் இருந்து பணம் பறிக்கவே இந்த கொடிய ஏற்பாட்டினை அவர்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் யாஸிதி குடும்பங்கள் பெரும்பாலும் கடுமையான கடன் தொல்லையில் சிக்குண்டு அல்லல் பட்டு வருவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

லாமியா என்ற 18 வயது யாசிதி இளம்பெண் இதேப்போன்று ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக கொடுமைக்குள்ளாகி பின்னர் அங்கிருந்து தப்ப நான்கு முறை முயன்று தோல்வி கண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒருவழியாக தப்பி தமது பெற்றோரிடம் வந்து சேர்ந்துள்ளார். தப்பித்து வரும்போது கண்ணிவெடியில் சிக்கி தனது ஒரு கண்ணையும் அவர் இழந்துள்ளார்.

இணையத்தில் ஏலம் விடப்படும் யாஸிதி பெண்கள்: கொடூரத்தின் உச்சகட்டம்... Reviewed by Author on July 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.