யாழ்.பல்கலைக்கழக கலை, வர்த்தக பீட கற்பித்தல் நடவடிக்கைகள் நாளை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் வர்த்தக பீட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பாகவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், மாணவர்கள் அனைவரும் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இதுவரையில் ஆரம்பிக்கப்படாமல் இருந்த முதலாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பாகவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக கலை, வர்த்தக பீட கற்பித்தல் நடவடிக்கைகள் நாளை!
Reviewed by Author
on
July 25, 2016
Rating:

No comments:
Post a Comment