அண்மைய செய்திகள்

recent
-

சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு - பொலிஸார் விசாரணை!

 யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்து தப்பி செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது​. 

பூட்டப்பட்டிருந்த இரும்பு கதவுகளுக்கே தீ வைக்கப்பட்டமையால், பெரியளவிலான சேதங்கள் ஏற்படவில்லை. 

சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான அருண் சித்தார்த்தின் கட்சி அலுவலகத்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு - பொலிஸார் விசாரணை! Reviewed by Vijithan on January 14, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.