உலகளவில் அதிகபட்ச வெப்பம் குவைத் நாட்டில் பதிவு...
உலகளவில் அங்கு அதிகபட்சமாக 129.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
வளைகுடா நாடுகளில் எப்போதுமே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். கோடைக் காலத்தில் சொல்லவே வேண்டியதில்ைல. ஆனால் இந்த முறை வழக்கத்துக்கும் அதிகமாக குவைத் நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.
உலக வரலாற்றிலேயே கடந்த வியாழக்கிழமை, குவைத்தில் உள்ள மித்ரிபா பகுதியில் 54 டிகிரி செல்சியஸ் (129.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது.
வெயிலின் கோர தாக்குதலால், குவைத் மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 1913ம் ஆண்டு ஜூலை 10ல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 56.7 டிகிரி செல்சியசாக (134.06 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகி இருந்தது.
ஆனால் இந்த பதிவின் உண்மைத்தன்மை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதனால், இப்போது குவைத்தில் பதிவாகி உள்ள வெப்பநிலை, உலகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் அதிகபட்ச வெப்பம் குவைத் நாட்டில் பதிவு...
Reviewed by Author
on
July 25, 2016
Rating:

No comments:
Post a Comment