கூட்டமைப்பிடம் விளக்கம் கோருகின்றனர்; காணாமல்போனோருடைய உறவுகள்
போரின் போதும் அதற்குப் பின்னரும் கைதுசெய்யப்பட்டும் கடத்தப்பட்டும் சரணடைந்த நிலையிலும் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கம் கோரும் முக்கிய சந்திப்பொன்று இன்று முல்லைத்தீவில் இடம்பெறுகின்றது.
முல்லைத்தீவு உட்பட வன்னியில் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, இந்த விளக்கம் கோருவதற்கான சந்திப்பிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு நகரிலுள்ள வீரகத்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் உள்ளுர் நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இந்த சந்திப்பில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன், கந்தையா சிவநேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
July 01, 2016
Rating:

No comments:
Post a Comment