வடமாகாண மீனவர்களின் பிரச்சினைக்கு தாங்கள் தான் தீர்வை பெற்றுக்கொடுக்க முனைவதக சிலர் மார் தட்டிக் கொள்ள முனைப்பு காட்டுகின்றனர்-என்.எம்.ஆலம்.
வடமாகாண மீன்பிடி அமைச்சின் பிரசண்ணத்துடனேயே
எதிர் காலத்தில் இந்திய இலங்கை மீனவர்களின் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என
வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணையத் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் குறித்து வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்திலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களை சந்திப்பதற்கு எதிர்வரும் 21ம் திகதி வடமாகாண மீனவர்கள் சார்பாக சில மாவட்டங்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மீனவர்களின் தலைவர் என குறிப்பிடுபவர்கள் பத்திரிகை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர்.
இதில் பிராதானமாக யாழ் மாவட்ட கிராமிய மீனவ சம்மேளனத் தலைவரின் அறிக்கை வாயிலாக அறியக் கூடியதாக உள்ளது.
வடமாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தி நான்கு மாவட்ட மீனவ சமாசங்களின் தலைவர்களும் அவர்களுடனான வடமாகாண கடற்தொழிலாளர் இணையமும் இணைந்து இந்திய மீனவர்களின் சட்டவிரோத உள் நுழைவு மற்றும் அவர்களால் செய்யப்படும் சட்ட விரோத இலுவை மடித் தொழில்கள், தென் பகுதி பருவ கால மீனவர்களின் மிதமிஞ்சிய வருகையும் அவர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்ற இறங்குதுறை தொடர்பான பிரச்சினைகள், உள்ள10ர் மீனவர்களால் செய்யப்படுகின்ற சட்டவிரோத தொழில் முறைகள் வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளை மையப்படுத்தி கடந்த 12ம் திகதி மாகாண சபை முன்பாக வடமாகான மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கொச்சப்படுத்தி வடமாகாணத்தில் அவ்வாறான பிரச்சினைகள் ஏதுமில்லை என அறிக்கை விட்டனர்.
குறித்த அறிக்கையினை விட்டவர்களும் பயந்து ஓடி ஒழிந்தவர்களும் யாருக்கோ ஏவலாளிகளாக செயற்பட்டவர்களும் தற்போது வடமாகாண மீனவர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை புரிந்து கொண்ட வடமாகாண அரசும் மத்திய மீனபிடி அமைச்சும் நியாயமான தீர்வை வழங்க முன்வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் தான் இதனைப் பெற்றுத்தந்தவர்கள் என வடமாகாண மீனவர்களிடம் மார் தட்டிக் கொள்ள முனைப்பு காட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் இவர்களின் செயற்பாடுகளை வடமாகாண மீனவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
மத்திய அரசின் அமைச்சர்களுக்கு அவர்களின் விசுவாசிகள் என தங்களைக் காட்டிக் கொள்ளும் இவர்கள் தாங்கள் தான் வடபகுதி மீனவர்களின் தலைவர்கள் என கூறிக் கொண்டு அமைச்சு இடும் கட்டளைகளை வடபகுதியில் தினிப்பதற்கும் வடபகுதியில் உள்ள மீனவர் பிரச்சினைகளை அமைச்சுக்கு தெளிவுபடுத்தினால் எங்கோ தமது பதவிகள் பரி போய்விடும் என மௌனிகளாயிருந்த இவ்வாறானவர்களின் பிரசன்னம் இப்பிரச்சினைக்கு தீர்வைத் தராது.
ஏனெனில் கடங்த மூன்று கட்ட பேச்சு வார்த்தையிலும் கலந்து கொண்ட இவர்கள் உருப்படியாக எதனையும் செய்யவில்லை.
மீனவர் பிரச்சினை தொடர்பான உறுதியான தீர்வு திட்டம் ஏதும் இவர்களிடமில்லை.
எனவே இதற்கான தீர்வாக இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் அவர்கள் பாராளுமன்றில் கூறியது போல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட திருத்தச்சட்டத்தை வர்த்தமானி; ஊடாக வெளியிட உடன் நடவடிக்கை எடுக்க தாங்கள் பரிந்துறை செய்வதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் வட பகுதி மீனவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தைகள் வடமாகாண மீன்பிடி அமைச்சராகிய தங்களின் பிரசண்ணத்துடனே நடைபெற வேண்டுமென வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நிருபர்-
(19-07-2016)

Reviewed by NEWMANNAR
on
July 20, 2016
Rating:

No comments:
Post a Comment