மன்னாரில் இடம் பெற்ற இரு வேறு விபத்துக்களில் இருவர் காயம்.(Photos)
மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற இரு வேறு விபத்துக்களில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தோட்டவெளி 5 ஆம் கட்டை சந்தியில் வீதியை விட்டு விலகிய நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு வீதிக்கு அருகாமையில் உள்ள தொலைத்தொடர்பு இணைப்பு கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது குறித்த காரை செலுத்தி வந்த பாலசுப்பிரமணியம் (வயது-37) என்ற நபர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொழும்பு பகுதியை வதிவிடமாக கொண்டவர் என தெரிய வருகின்றது.
குறித்த கார் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதோடு,தொலைத் தொடர்பு இணைப்புக்கம்பம் முறிந்து வீழ்ந்து சேதமாகியுள்ளது.
இதே வேளை மன்னார் - மதவாச்சி பிரதான வீதி வங்காலை வை சந்திக்கு சற்று தொலைவில் இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையத்திற்கு பொருட்களை ஏற்றி வந்த லொரி ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்திற்கு உள்ளாகியது.
இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
மன்னார் நிருபர்
(19-07-2016)

Reviewed by NEWMANNAR
on
July 20, 2016
Rating:
No comments:
Post a Comment