அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் இடம்பெற்ற திருவள்ளுவர் விழா

இலண்டனை சேர்ந்த அபிராமி விமலதாசன் நினைவாக கிளிநொச்சி தமிழ்ச்சங்கம் நடத்திய திருவள்ளுவர் விழாவும் பரிசாளிப்பு நன்மதிப்பு விழாவும் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது

தமிழ்ச்சங்க தலைவர் சோதிநாதன் தலைமையில் அகவணக்கம் , மற்றும் மங்கள விளக்கு ஏற்றல் ,தமிழ்த்தாய் வாழ்த்து என்பவற்றுடன் ஆரம்பமான இன் நிகழ்வில்கலைநிகழ்வுகள் பரிசளிப்புக்கள் , கௌரவிப்புக்கள் ,கருத்துரைகள் என்பன நடைபெற்றன

கௌரவிப்புக்கள் வரிசையில் குறளாயத் திருமணம் புரிந்த மன இனையர் , நன்மைருத்துவர் ,நன்முதல்வர் ,தமிழ்த் தொண்டு ,நல்லாசிரியர் ,மக்கள் தொண்டு எனும் வகையில்கௌ ரவிப்புக்கள் நடைபெற்றன

அதனை தொடர்ந்து திருக்குறள் வினாவிடை நூல் வெளியீடும் இடம்பெற்றது
இன் நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா , வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கிளிநொச்சி தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், கலை ஆர்வலர்கள் , கிளிநொச்சி பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


கிளிநொச்சியில் இடம்பெற்ற திருவள்ளுவர் விழா Reviewed by NEWMANNAR on July 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.