அண்மைய செய்திகள்

recent
-

பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே !


பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே !
ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள் !
.
எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்

கி.மு - 2600 : எகிப்திய தமிழினத்தவராகிய மாயர்களால் பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு ' என்று அழைக்கப் பட்டது .

சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர் . அது "சிறு இடு " .

மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர் . பெரும் + இடு = பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது .

தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல . பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து , பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் இதற்கு சான்று. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர்.........

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே ! Reviewed by Author on July 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.