வங்கதேசத்தில் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் மேலும் ஒரு கொடூரத் தாக்குதல்
வங்கதேசத்தில் மேலும் ஒரு கொடூர தாக்குதலை இஸ்லாமியவாத தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.
வங்கதேசத்தின் கிஷோர்கஞ்ச் நகரில் ஈத் பண்டிகையை கொண்டாட சுமார் இரண்டரை லட்சம் பேர் கூடியிருந்தார்கள்.
நாட்டிலே பிரம்மாண்ட தொழுகை கூட்டமாக இது பார்க்கப்படுகிறது.
அப்போது, நான்கு தீவிரவாதிகள் நீண்ட கத்திகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு, கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த முஸ்லீம்களை பரிசோதித்துக் கொண்டிருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில், இரு போலிஸ் அதிகாரிகள், கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் மற்றும் ஒரு தாக்குதல்காரர் என நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவமும் இதில் அடங்கும்.
இந்தக் கூட்டத்தை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கியதற்கு, தொழுகையை முன்னின்று வழி நடத்திய இமாம் மவுலானா ஃபரீதுதீன் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இஸ்லாம் மதத்தின் பெயரால் கொலை செய்வதற்கு எதிராக மவுலானா ஆணை ஒன்றை சமீபத்தில் பிறப்பித்திருந்தார்.
வங்கதேசத்தின் கிஷோர்கஞ்ச் நகரில் ஈத் பண்டிகையை கொண்டாட சுமார் இரண்டரை லட்சம் பேர் கூடியிருந்தார்கள்.
நாட்டிலே பிரம்மாண்ட தொழுகை கூட்டமாக இது பார்க்கப்படுகிறது.

இந்த மோதலில், இரு போலிஸ் அதிகாரிகள், கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் மற்றும் ஒரு தாக்குதல்காரர் என நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவமும் இதில் அடங்கும்.
இந்தக் கூட்டத்தை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கியதற்கு, தொழுகையை முன்னின்று வழி நடத்திய இமாம் மவுலானா ஃபரீதுதீன் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இஸ்லாம் மதத்தின் பெயரால் கொலை செய்வதற்கு எதிராக மவுலானா ஆணை ஒன்றை சமீபத்தில் பிறப்பித்திருந்தார்.
வங்கதேசத்தில் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் மேலும் ஒரு கொடூரத் தாக்குதல்
Reviewed by NEWMANNAR
on
July 07, 2016
Rating:

No comments:
Post a Comment