தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம்! பாதிக்கப்படும் மக்கள் யார்?
பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளம் பிரதேசத்தில் அமைத்தால் அப்பகுதியில் புகையிரதப் பாதை அருகில் குடியிருக்கும் மக்களை வெளியேற்ற வேண்டி வரும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் பலர் வவுனியா புகையிரதப் பாதை அருகில் உள்ள அரச காணிகளில் கடந்த பல வருடங்களாக வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் பட்சத்தில் தாண்டிக்குளம் விவசாய பண்ணை அருகில் புகையிரதக் பாதை ஓரமாக அரச காணிகளில் குடியிருப்பவர்களை வெளியேற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். தாண்டிக்குளத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படின் ஏற்படும் இடநெருக்கடி மற்றும் கட்டட நிர்மாணப் பணிகள் என்பவற்றுக்காக அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை உருவாகும்.
அவ்வாறு வெளியேற்றில் அவர்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் விடப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் வேறு இடத்தில் சென்று வாழ்வதற்கு காணி மற்றும் வீட்டுத்திட்டமோ அல்லது அவர்களின் வீடுகளிற்கான நட்டஈடோ வழங்க வேண்டி வரும். அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.
எனவே உடனடியாக தாண்டிக்குளம் காணியைப் பெற்று வேலைகளை முன்னெடுப்பது என்பது சாத்தியமற்றது. இதனால் தாம் வலியுறுத்துவது போன்று வடபகுதி விவசாயிகளின் ஒரே தெரிவாகவுள்ள ஓமந்தைக் காணியை தெரிவு செய்யுமாறும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம்! பாதிக்கப்படும் மக்கள் யார்?
Reviewed by Author
on
July 11, 2016
Rating:

No comments:
Post a Comment