அண்மைய செய்திகள்

recent
-

100 வயதில் தங்கப்பதக்கங்களை குவிக்கும் இந்திய பெண்மணி!


மாஸ்டர் கேம்ஸ் எனப்படும் மூத்தவர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில்,100 வயதான இந்திய வீராங்கனை மன் கவுர் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

கனடா வான்கூவரில் நேற்று அமெரிக்க மாஸ்டர் கேம்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த மன் கவுர் என்ற 100 வயது மூதாட்டி, 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். பந்தயத்தில் அவர் 1 நிமிடம் 21 வினாடிகளில் ஓடி இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் மன் கவுர்தான் இந்தபோட்டியில் கலந்து கொண்ட ஒரே ஒரு பெண் போட்டியாளர். தடகள போட்டிகளுடன் குண்டு எறிதல், ஈட்டி ஏறிதல் போன்ற போட்டிகளில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார் மன் கவுர்.

தனது வெற்றி குறித்து மன் கவுர் கூறும்போது, நான் வெற்றி பெற்றுவிட்டேன். இந்தியாவுக்கு சென்றதும் எனது வெற்றியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என கூறியுள்ளார்.

மன் கவுரின் சாதனைக்கு அவரது மகன் குருதேவ் சிங் ஊக்கசக்தியாக விளங்கி வருகிறார். இவரும் மாஸ்டர் கேம்ஸ்சில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


100 வயதில் தங்கப்பதக்கங்களை குவிக்கும் இந்திய பெண்மணி! Reviewed by Author on August 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.