மன்னாரில் 21 பேர் படுகொலை! இலங்கை அகதியின் அதிர்ச்சி வாக்குமூலம்
1991ஆம் ஆண்டு மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 21 இளைஞர்களை இராணுவம் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 21 பேரும் இராணுவத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் புதைக்கப்பட்டுள்ளதாக இந்திய அகதிமுகாமில் வசிக்கும் இலங்கை அகதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தார்மலிங்கம் என்ற இலங்கை அகதி கூறுகையில், தாம் உள்ளிட்ட11 பேர் அகதிகளாக இந்தியா செல்ல முற்பட்ட போது தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டோம்
கைது செய்யப்பட்ட அனைவரையும் இரவோடு இரவாக இராணுவத்தினர் அடித்துக் கொலை செய்து கிணற்றில் புதைத்தனர்.
தான் விடுதலைப்புலிகளின் அமைப்பில் செயற்பட்டதாக கூறினேன். அதன் காரணமாக ஏனையவர்களை காட்டித்தரும் எண்ணத்தில் என்னை விட்டு வைத்தார்கள்.
கொல்லப்பட்டவர்கள் குறித்து மேல் அதிகாரிகள் விசாரித்தால் விடுதலைப்புலி உறுப்பினர்களே உயிரிழந்ததாக தெரிவிக்கும் படி தன்னை கட்டாயப்படுத்தினார்கள்.
அப்போதய சூழ்நிலை என்னை அவ்வாறு கூறவைத்தது. அதன் பின்னர் குறித்த படுகொலை சம்பவத்துடன், தொடர்புடைய அதிகாரிகளுக்கு விசுவாசாமாக இருப்பது போல செயற்பட்டேன்.
அவர்களும் தமது சொந்த தேவைகளுக்காக என்னை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு நாள் அதிஷ்டவசமாக தப்பி இந்தியா வந்துவிட்டேன்.
இந்நிலையில், குறித்த படுகொலை தொடர்பில் தற்போது வாக்குமூலம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Reviewed by NEWMANNAR
on
August 10, 2016
Rating:

No comments:
Post a Comment