அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய கேள்வி பதில் -28-08-16 இண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை?


கேள்வி:−
          எனது அன்பிற்குரிய வழக்கறிஞர் சுதன் sir!நீலகிரியிலிருந்து செல்வராணி.sir நான் இரண்டு வருடமாக டுபாயில் வேலை செய்கிறேன்.எனது கணவர் என்னிடம் விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் பண்ணியுள்ளார்.sir இண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை?

பதில்:−
             அன்பான சகோதரியே! திருமணம் பற்றி சட்டப் பிரமாணம்"திருமணத்தில் இணையும் தரப்பினர் இருவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும்,விட்டுக் கொடுப்புடனும்,துரோகம் பண்ணாமலும் வாழ வேண்டும்.இதனை மீறினால்,மீறும் தரப்பினரை குற்றவாளிகாக சட்டம் கருதும்"என்ற சட்டத் தத்துவத்தினை வலியுறுத்துகிறது.எனவே தங்களுடைய அனுமதியோ,விருப்பமோ இன்றி தங்களுடைய கணவர் இரண்டாவது திருமணம் பண்ணினாரோ அந்த நிமிடமே அவர் சட்டத்தின்படி குற்றவாளியாவார்.
ஒரு கணவன் அல்லது மனைவி அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிறகு இன்னொரு திருமணம் செய்துக்கொண்டால் அது செல்லாது.கணவன் அல்லது மனைவி இருதுனை புரிந்த குற்றத்திற்க்கு ஆளாகிவிடுவார்கள்...
ஒரு நபர் தன் வாழ்வில் நடந்த முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முனைந்தால்/ஒப்புக்கொண்டால் அது சட்டபடி குற்றமாகும்.இதற்கான தண்டனை 7 ஆண்டுகள் சிறைப்படுத்துதல் மற்றும் அபராதமும் ஆகும். இதர காரணங்கள் என்றால் 7 ஆண்டு சிறைவைப்பு மற்றும் அபராதமூம் வழங்கப்படும்.
மனித ஒழுக்கத்தின் படி எந்த ஒரு நபருக்கு கணவன் அல்லது மனைவி உயிருடன் இருந்து மறுமணம் புரிந்தால் அது செல்லுபடி ஆகாது . ஏனெனில் அது கணவன் அல்லது மனைவியின் வாழ்நாள் காலத்தில் நடைபெறுவதால் அது இருதுணை மணம் குற்றமாகும். ( இந்திய சட்டப் பிரிவு 494 )இருதுணை மணகுற்றத்திற்க்கு அத்தியவசியமானவை
1). குற்றவாளி வேறொருவர்க்கு திருமணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். உண்மையாக நடந்த திருமணத்திற்க்கான நிரூபனம் அவசியமாகிறது.
( the accused must have been married to same person . proof of first marriage necessary )
இங்கு முதல் திருமணம் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். ஒரு வேலை தரப்பினர்களை ஆளுமை செய்யும் சட்டப்படி முதல் திருமணம் செல்லத்தக்கதல்ல என்றால் இரண்டாவது திருமணம் செய்வதன் மூலம் எந்த குற்றமும் செய்யப்படவில்லை..மேலும் தரப்பினர்களின் வழக்காறு சட்டங்குகளின்படி இரண்டாவது திருமணம் முறைபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய திருமணத்தின் செல்லுபடி தன்மை தரப்பினர்களின் மதங்கள் , அவர்களின் உறைவிடம் மற்றும் சில இன்றியமையாத மதம் தொடர்பான திருமணச்சடங்குகளை நிறைவேற்றபடுவதை சார்ந்துள்ளது.உதாரணம்:−
தரப்பினர்கள் இந்துப் பழங்குடியினர்கள் இரண்டாவது மற்றும் அடுதடுத்த திருமணங்கள் அவர்களது பழங்குடியின வழக்கங்கள் வழக்காறுகளால் ஆளூமை செய்யபடுகிறது என்றால் அத்தகைய இரண்டாவது திருமணங்கள் செல்லுபடியாகும.மற்றும் அந்த நபர் தண்டிக்கத்தக்கவரல்ல என்று இந்திய சட்டம் கூறுகிறது
2). இரண்டாவது திருமணம் புரியும் நாளில் யாருடன் முதல் திருமணம் செய்துக் கொண்டாரோ அவர் உயிருடன் இருக்க வேண்டும்.
(on the date of the second marriage the person to whom the accused was married should be alive )
3). இரண்டாவது திருமணம் முதல் திருமணம் போல் கொண்டாட படவேண்டும் மற்றும் அது செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.
( second marriage must be celebrated in the same manner as the first marriage and must be a valid one )
அது போல் காம உறவு அல்லது கள்ள உறவு வைத்துக் கொள்ளுதல் திருமணம் ஆகாது .அதே போல் விவகரத்து தீர்ப்பானை செல்லத்தக்க திருமணத்தை கலைக்கிறது. திருமணம் கலைக்கப்பட்ட பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்.இரண்டாவது திருமணத்தை நடத்தி வைக்கும் பூசாரி குற்ற உடந்தையாளர் என்ற வகையில் பிரிவு 494 மற்றும் 109 ன் கீழ் தண்டிக்கப்படுவார்.இருப்பினும் இரண்டாவது திருமணத்திற்க்கு வருவதற்க்கு சம்மதம் தெரிவித்த நபர்கள் அல்லது அந்த திருமணத்திற்க்கு வீட்டில் இடம் அளித்தவர்கள் அந்த திருமணத்திற்க்கு குற்ற உடந்தையாளர் ஆவதில்லை..
இரண்டாவது திருமணம் செய்யும் சந்தர்பங்களாக:
1). முதல் திருமணம் செல்லுபடி ஆகாது என தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த நபர் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது குற்றமல்ல
2). முன்னையகணவன் அல்லது மனைவி பற்றி தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு உயிருடன் இருக்கும் தகவல் ஏதுமில்லை என்றால் மற்ற நபர் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ள முடியும். இங்கு இரண்டாவது திருமணத்தின் வாழ்க்கைத் துனையிடம் முதல் திருமணம் பற்றி கூறியிருக்க வேண்டும்.
3). தகுதி வய்ந்த நீதிமன்றத்தின் விவாகரத்து தீர்ப்பாணையின் மூலம் திருமணம் கலைக்கப்பட்டுவிட்டால் இரண்டாவது திருமணம் செய்யலாம்.
4)முதல் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவராக/உடல் இயங்காதவராக இருப்பின் அதற்கான தகுந்த ஆதரங்களுடன் நீதிமன்றில் சமர்பித்து,நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் இரண்டாவது திருமணம் பண்ண முடியும்
இன்றைய கேள்வி பதில் -28-08-16 இண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை? Reviewed by NEWMANNAR on August 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.