அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்: குடிமக்களுக்கு அரசு வலியுறுத்தல்....
தென் கொரியா நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துக்கொண்டு செல்வதால் குடிமக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்றான தென் கொரியா உலக நாடுகளில் குறைந்தளவு பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
கடந்த 1960ம் ஆண்டு முதல் தென் கொரியாவில் பிறப்பு விகிதம் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது.
குறிப்பாக, கடந்தாண்டின் முதல் 5 மாதங்களில் இருந்த பிறப்பு விகிதமானது இந்தாண்டு முதல் 5 மாதத்தில் 5.3 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்நிலை தொடர்ந்து நீடித்தால் தென் கொரியா உலக நாடுகளின் மக்கள் தொகை பட்டியலில் பின்னடைவு பெற்று பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும்.
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தற்போது அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கூடுதலாக குழந்தைகள் பெற்றுக்கொள்ள இது தான் சரியான நேரம். ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களுக்கு நிதியுதவி செய்வதுடன், தாயாருக்கு கூடுதலாக ஊதியத்துடன் விடுமுறையும் வழங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சரான Chung Chin-youb தெரிவித்துள்ளார்.
மேலும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தற்போது அரசு 44 மில்லியன் பவுண்ட் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்: குடிமக்களுக்கு அரசு வலியுறுத்தல்....
Reviewed by Author
on
August 28, 2016
Rating:

No comments:
Post a Comment