அண்மைய செய்திகள்

recent
-

பெரியகமம் எவகிறீன் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது-Photos




மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் லீக்கில் பதிவு செய்யப்பட்டB Divisionகழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பெரியகமம் எவகிறீன் விளையாட்டுக்கழகம் சம்பியனாகி சாதனை படைத்தது.

அணிக்கு 9 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது மன்னார் நானாட்டான் இலகடிப்பிட்டி சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் 27/28.08.2016 ம் திகதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 22 அணிகள் பங்குபற்றின.

28.08.2016 ஞாயிறு மாலை 4.30 மணியளவில் நானாட்டான் றீகன் ஸ்டார்; வி க வும் பெரியகமம் எவகிறீன் வி.க வும் இறுதிப்போட்டியில் மோதின. போட்டி தொடங்கி முடியும் வரை இரு அணிகளும் மாறி மாறி முயற்சித்தும் கோல் எதனையும் போட முடியவில்லை. இதனால் போட்டி முடிந்தபோது 0-0 என காணப்பட்டு இறுதியில் தலா 5 பெனால்ரி உதைகள் வழங்கப்பட்டன. பெனால்ரி முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் பெரியகமம் எவகிறீன் விளையாட்டுக்கழகம் சம்பியனாகினாகியது.

இவ்விறுதிப்போட்டியின் சிறந்த வீரராக பெரியகமம் எவகிறீன் விளையாட்டுக்கழக கோல் காப்பாளர் போட்டியின் சிறந்த வீரராகவும்தொடரின் சிறந்த வீரராக விடத்தல்தீவு புதிய யுனைற்றட் வி.க வீரர் சுயாட்; அவர்களும் தெரிவாகி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சம்பியன் அணிக்கு வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசும் உதைபந்தும்  2ம் இடத்தைப்பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினராகிய கௌரவ வைத்தியர் குணசீலன் அவர்களும் ஏனைய விருந்தினர்களாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களும் மன்னார் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர்  செயலாளர்  உபதலைவர்கள்  உப செயலாளர் இ பொருளாளர் இ உபபொருளாளர்  சென் மேரிஸ் வி.க தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.







பெரியகமம் எவகிறீன் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது-Photos Reviewed by NEWMANNAR on August 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.